இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் இந்திய மாணவர்கள் சங்கத்தின் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் இதில் கலந்து கொண்ட அனைவரும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கோஷம் எழுப்பியள்ளனர். இதனையடுத்து தெற்கு வீதி பகுதியில் இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டமானது இந்திய மாணவர்கள் சங்க மாநில தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. மேலும் இதில் மதுரை எம்.பி வெங்கடேசன், அகில இந்திய தலைவர் சானு, துணை செயலாளர் நிதிஷ் நாராயணன், மாநில செயலாளர் மாரியப்பன், மாநிலத் துணை செயலாளர் பிரகாஷ், மத்திய குழு உறுப்பினர் சத்யா, ஜான்சி, ரூபன், சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.