ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், போர்ச்சுகல், சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வெப்ப உமிழ்வுகள் அதிகரித்து வருகிறது. சென்ற 2003 ஆம் வருடம் ஐரோப்பாவில் ஏற்பட்ட வெப்ப அலைகள் காரணமாக 70,000-க்கும் அதிகமான மக்கள் பலியாகினர். இந்த வெப்ப அலைகளின் எதிர்மறைமையான போக்கு 2026 வரையிலும் நீடிக்கும் என உலக வானிலை அமைப்பின் தலைவர் தகவல் தெரிவித்து இருக்கிறார். அதாவது காற்றிலுள்ள வெப்பம் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு போகாமல் ஒரே இடத்தில் தங்கும்போது வெப்ப அலைகள் ஏற்படுகிறது.
இப்போதைய தகவலின்படி பருவ கால மாற்ற விளைவால் வருங்காலத்தில் வெப்பம் 3 மடங்கு அதிகரித்து உலகநாடுகளை தாக்ககூடிய ஆபத்து இருப்பதாக ஆய்வு தகவல்கள் தெரிவிக்கிறது. அத்துடன் வருகிற 2100-ம் வருடத்தில் அமெரிக்காவின் தென் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் கோடை காலங்களில் பெருமளவு வெப்ப அளவு கடுமையாக இருக்கும். இப்போது கோடைக்காலத்தில் நிகழும் இந்த வெப்ப அலையானது வருகிற ஆண்டுகளில் வருடத்துக்கு 20 -50 மடங்கு என்ற எண்ணிக்கையில் அதிகரிக்ககூடும் என வானிலை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு பேராபத்தை விளைவிக்ககூடிய வெப்ப குறியீடானது 124 டிகிரி (51 டிகிரி செல்சியஸ்) என்ற அளவில் வருங்காலத்தில் பதிவாககூடும் என ஆய்வின் தலைவர் ஹார்வர்டு தெரிவித்துள்ளார். இந்த ஆய்வில் அவர் சென்ற 1979ம் வருடம் முதல் 1998ம் ஆண்டு வரையில் உலகம் முழுதும் ஏற்பட்ட வெப்ப நிகழ்வை அடிப்படையாக வைத்து வருகிற 2050 மற்றும் 2100 ஆம் ஆண்டு வரை ஒப்பிட்டு கணக்கிட்டு பார்த்துள்ளனர். இந்த வெப்பநிலை அதிகரிப்பால் உலகம் முழுதும் கடல் நீர்மட்டம் அதிகரிக்கும். அத்துடன் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் இது உயிரினங்கள் அழிவுக்கு வழி வகுக்கும்.