பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கோவில், கல்லணை, கும்பகோணம் ஐராவதீஸ்வரர் கோவில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், மனோரா உள்ளிட்ட இடங்கள் முக்கிய சுற்றுலா தளமாக விளங்குகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் பேருந்து மற்றும் ரயில்களில் வருகின்றனர். இந்நிலையில் தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டை 50 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இதற்கு இடையே சூரக்கோட்டை, மடிகை, துறையூர், மேலஉளூர், ஓரத்தநாடு என 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கிறது. இந்த கிராமங்களில் இருந்து ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிப்பதற்காக தஞ்சைக்கு வருகின்ற்னர். இந்நிலையில் தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டை செல்வதற்கு பேருந்து கட்டணம் 36 ரூபாய் மட்டுமே ஆகும்.
ஆனால் தற்போது அரசு பேருந்துகளில் விபத்து மற்றும் சுங்கவரி என கூடுதலாக 9 ரூபாய் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து பயணிகள் கூறியதாவது. தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் 36 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டது. ஆனால் தற்போது 45 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. கேட்டால் சுங்கச்சாவடி கட்டணம் என கூறுகின்றனர். ஆனால் தஞ்சை மாவட்டத்திலேயே சுங்கச்சாவடி கிடையாது. இதனால் ஒரு நாளைக்கு பயணம் செய்யும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.