சென்னையில் மீண்டும் தற்போது இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது. இதனை அடுத்து மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. துபாயிலிருந்து 216 பயணிகளுடன் சென்னை வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், பக்ரைனிலிருந்து 182 பயணிகளுடன் சென்னை வந்த கல்ப் ஏர்வேஸ் விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் ஹைதராபாத் மற்றும் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையில் துபாயில் இருந்து 216 பயணிகளுடன் இரவு 8:30 மணிக்கு சென்னை வந்த எமரேட்டர்ஸ் ஏர்லைன்ஸ் லக்னோவில் இருந்து இரவு 8.35 மணிக்கு 114 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் மேலும் மதுரையிலிருந்து 62 பயணிகளுடன் இரவு 8 45 மணிக்கு சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் போன்ற மூன்று விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் பறந்து கொண்டிருக்கின்றது. அதேபோல சென்னையில் இருந்து திருச்சி, மும்பை, டில்லி, பெங்களூர் செல்ல வேண்டிய நான்கு விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி இருக்கின்றனர்.
Categories
“தரை இறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கும் விமானங்கள்”… கடும் அவதியில் பயணிகள்…!!!!!
