Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சட்டென நின்ற லாரி…. எதிர்பார்க்காமல் மோதிய பைக்…. துடிதுடித்து இறந்த மெக்கானிக்…. ஈரோட்டில் பரபரப்பு….!!!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் போக்குவரத்து என்பது பொதுமக்களின் அத்தியாவசிய தேவையாகவே மாறிவிட்டது. தினசரி மக்கள் ஏதாவது ஒரு தேவைக்காக வெளியே சென்று வருகிறார்கள். போக்குவரத்து என்பது அத்தியாவசிய தேவையாக இருந்தாலும் கூட தினசரி ஏதாவது ஒரு இடத்தில் சாலை விபத்துக்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த சாலை விபத்துகளினால் பல்வேறு விதமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

அந்த வகையில் ஈரோடு மாவட்டத்திலுள்ள அரசன் குட்டை பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி சுசிலா என்ற மனைவியும், 12 வயதில் ஹரிஷ் என்ற மகனும், 6 வயதுடைய அனுஹாசினி என்ற மகளும் இருக்கின்றனர். இவர் கார் பழுது பார்க்கும் ஒர்க் ஷாப் ஒன்றினை நடத்தி வந்துள்ளார். இவர் வழக்கம் போல் தன்னுடைய வேலைகளை முடித்துவிட்டு இரவு 11:30 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார்.

இவர் வேட்டுவபாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று திடீரென நின்றதால், எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக பெருந்துறை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த செந்தில் குமாரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |