தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாக சைதன் யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த பிறகு சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு அவர் டான்ஸ் ஆடி இருந்ததற்கு பெரிய வரவேற்பு கிடைத்ததால் தற்போது இந்தியிலும் மிகப் பிரபலமான நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் இந்திய அளவில் டாப் நடிகைகளின் பட்டியலில் சமந்தா முதலிடத்தை பிடித்து வருகின்றார். இவர் தற்போது யசோதா மற்றும் சகுந்தலா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இந்தியில் ஒரு வெப் சீரிஸில் நடிக்கின்றார். இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் நடிகை சமந்தா தற்போது தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.இதுவரை 2.5 கோடி ரூபாய் அளவுக்கு சம்பளம் வாங்கி வந்த சமந்தா தற்போது ஒரு கோடி அதிகரித்து 3.5 கோடி சம்பளம் கொடுங்கள் என்று தயாரிப்பாளர்களிடம் கண்டிப்பாக கூறி விடுகிறாராம்.