செல்வராகவன் நடிப்பில் உருவாகியிருக்கும் பகாசூரன் திரைப்படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
மோகன்ஜி இயக்கத்தில் இயக்குனர் செல்வராகவன் மற்றும் நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படம் பகாசூரன். இத்திரைப்படத்தில் ராதாரவியும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க மோகன் ஜி-யின் ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கின்றது.
இந்நிலையில் டீசர் குறித்து அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதில் களம் கண்டு ஆடுவான் பகாசூரன்…. படத்தின் டீசர் இன்று காலை வெளியாகும் என இயக்குனர் தெரிவித்திருந்தார். அதன்படி வெளியிடப்பட்டுள்ளது.