Categories
தேசிய செய்திகள்

டூ டூட்டு டூ டூட்டு….. “பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்” அதகலமான பஸ் ஸ்டாண்டு….. எஸ்கேப் ஆன காதலன்….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் பைதான் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இரண்டு இளம்பெண்களை ஒரே நேரத்தில் காதலித்து வந்ததாக தெரிகிறது. அந்த இரு இளம்பெண்களுக்கும் ஒருவரை ஒருவர் தெரியாது என்பதால் இளைஞர் இருவருடனும் பழகி வந்திருக்கிறார். ஆனால், பல நாள் திருட்டு ஒருநாள் வெளிப்படும் என்ற பழமொழி போல் இந்த ரகசியமும் சமீபத்தில் வெளியே வந்திருக்கிறது. வந்த இடம் பேருந்து நிலையம் என்பதால் பிரச்னை பெரிதாகிவிட்டது.

சில தினங்களுக்கு முன்னர் அந்த இளைஞர் தனது காதலியுடன் பைதான் மாவட்ட பேருந்து நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது, அங்கு அவருடைய இன்னொரு காதலியும் இருக்கவே விஷயம் விபரீதமாகியுள்ளது. இரு பெண்களும் வாக்குவாதத்தில் ஈடுபட அப்பகுதியே போக்குவரத்து ஸ்தம்பித்திருக்கிறது. இதனையடுத்து இந்த விஷயம் உள்ளூர் காவல்துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது. இவ்வளவு களேபரங்களுக்கும் காரணமான அந்த இளைஞர் சந்தடி சாக்கில் அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இரு இளம்பெண்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு இருவருக்கும் ஆலோசனை கூறிய போலீசார் இதன் பின்னர் இப்படி நடந்துகொள்ளக்கூடாது என எச்சரித்து இரு பெண்களையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Categories

Tech |