நாட்டில் மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு நிறைய பென்ஷன் திட்டங்கள் இருக்கின்றன.அதன்படி 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் தோறும் 25 ஆயிரம் ரூபாய் வரை பென்ஷன் வழங்கும் திட்டத்தை டெல்லி அரசு அறிவித்துள்ளது.இந்த முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு 60 வயது முதல் 69 வயது வரை உள்ள முதியவர்களுக்கு மாதம்தோறும் 2000 ரூபாய் வழங்குகின்றது.
70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ஓய்வூதிய மாதம் 2500 ரூபாய் வழங்குகிறது.இந்த தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். குறிப்பாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்த தொகை மாற்றப்படும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ஐம்பதாயிரம் வரை உள்ளவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள்:
ரேஷன் கார்டு
வயதுச் சான்று
அடையாள அட்டை
ஆதார் அட்டை
வாக்காளர் அட்டை
குடியிருப்பு சான்றிதழ்
வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல்
பாஸ்போர்ட் அளவு போட்டோ 2
மொபைல் நம்பர்
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த ஓய்வூதிய திட்டத்திற்கு விண்ணப்பிக்க https://edistrict.delhigovt.nic.in/in/en/Public/Downloads.html என்ற வெப்சைட்டில் செல்ல வேண்டும்.
இதிலிருந்து படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான அனைத்து தகவல்களையும் படிவத்தில் நிரப்ப வேண்டும்.