Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“மாநகராட்சி கூட்டம்” 126 தொழில்களுக்கு லைசன்ஸ் கட்டணம் உயர்வு…. திடீர் சலசலப்பால் பரபரப்பு…!!!!

மாநகராட்சி கூட்டத்தில் திடீரென பிரச்சனை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் நேற்று மேயர் அன்பழகன் தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் மற்றும் மண்டல குழு தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சியின் மொத்த பணிகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதால், தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு தொகுப்பூதியத்தை மாதம் 14 ஆயிரமாக உயர்த்த மற்றும் அகவிலைப்படியை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் ஒரு வார்டுக்கு 25 வீதம் மொத்தம் 625 எல்இடி விளக்குகளை பொருத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து பரிசோதனை நிலையங்கள், சாக்குப்பை மண்டிகள், துணி தைக்கும் கடைகள், மெடிக்கல் ஷாப்கள், மிதிவண்டி விற்பனை கடைகள், கூல்ட்ரிங்ஸ் கடைகள், மிட்டாய் கடைகள், டாஸ்மாக்கில் விற்கப்படும் பலகாரங்கள், இட்லி மற்றும் தோசை விற்பனை செய்யும் கடைகள், வியாபாரத்திற்காக செயல்படும் தங்கும் விடுதிகள், கேன் மூலம் விற்பனை செய்யும் டீ மற்றும் காபி, பீடி மற்றும் சுருட்டு தயாரித்தல், செங்கல் மற்றும் சுண்ணாம்பு காளவாய், மீன் எண்ணெய் தயாரித்தல், தோல் பதனிடும் தொழில், கற்பூரம் காய்ச்சுதல், சலவைத் தொழில், மசாஜ் சென்டர், அழகு நிலையங்கள் மற்றும் முடி திருத்தும் கடைகள் உட்பட 126 தொழில்களுக்கு லைசன்ஸ் கட்டணங்களை உயர்த்துவது தொடர்பான முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாநகராட்சி கூட்டம் தொடங்கிய போது கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து கூறினார்கள். இதில் 10-வது வார்டு கவுன்சிலர் குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது என்று கூறினார். அப்போது குறிப்பிட்ட மேயர் உங்கள் வார்டை நான் ஏற்கனவே வந்து பார்த்திருக்கிறேன் தவறான தகவல்களை கூற வேண்டாம் என கோபத்தோடு கூறினார். இதனையடுத்து 60-வது வார்டு உறுப்பினர் தன்னுடைய வார்டில் இருக்கும் பாதாள சாக்கடை பிரச்சனைகள் குறித்து கூறிக் கொண்டிருக்கும்போது மற்ற கவுன்சிலர்கள் அவருக்கு இடையூறு செய்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கவுன்சிலர் காஜாமலை விஜய் மாதத்தில் ஒருமுறை நடக்கும் கூட்டத்தில் கூட என்னுடைய வார்டு பிரச்சனைகளை பற்றி பேச முடியவில்லை என கோபத்தோடு கூறிவிட்டு வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |