Categories
தேசிய செய்திகள்

ஒடிசா: மின்சாரம் பாய்ந்து அடுத்தடுத்து 3 யானைகள் பலி…. இவங்க தான் காரணம்?….!!!!!

ஒடிசாவில் கடந்த ஓரிரு நாட்களில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பரிதாபமாகஇறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2 நாட்களுக்கு முன்பாக ஒடிசாவின் கியோஞ்கர் மாவட்டத்தில் இரண்டு பெண் யானைகள் மின்சாரம் பாய்ந்து பலியாகியது. இந்த நிலையில் இன்று அங்குல் மாவட்டத்தில் மேலும் ஒரு யானை மின்சாரம் பாய்ந்து பலியாகி இருக்கிறது. இச்சம்பவம் அங்குல் மாவட்டத்திலுள்ள சட்கோஷியா வனவிலங்குகள் சரணாலயத்தில் இருந்து 500 மீட்டருக்கு அப்பால் நிகழ்ந்துள்ளது.

வனப்பகுதியில் விலங்குகளை பிடிப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியினாலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு வன விலங்குகளை பிடிக்க மின்சாரக் கம்பியை பயன்படுத்துபவர்களைப் பிடிப்பதற்கு அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதுகுறித்து பலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒடிசாவில் சென்ற 2017-ம் வருடத்தில் இருந்து 2022 வரை 63 யானைகள் மின்சாரம் பாய்ந்து பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |