Categories
உலக செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த மிகப்பெரிய மலைப்பாம்பு…. பயந்து நடுங்கிய மக்கள்…. வியக்க வைத்த பெண்…!!!

பிரிட்டனில் மிகப்பெரிய பாம்பு ஒன்று ஒரு குடியிருப்பிற்குள் புகுந்து செல்ல முயற்சித்த போது அனைவரும் பயந்து நின்ற சமயத்தில், பெண் ஒருவர் அசால்டாக அதை தோளில் வைத்து எடுத்துச் சென்றிருக்கிறார்.

பிரிட்டனில் உள்ள Hampshire என்ற பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றின் ஜன்னல் வழியே மிகவும் பெரிதான மலைப்பாம்பு நுழைய முயன்றது. இதனை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். ஒரு குச்சியை வைத்து அதனை தள்ளிய போது அது கீழே விழுந்துவிட்டது. அப்போது அங்கு வந்த Linda Elmer என்னும் பெண் அந்த பாம்பை உற்று கவனித்தார்.

அதன் பிறகு, அந்த பகுதியில் வசிக்கும் ஒரு நபரின் பாம்பு அது என்று தெரிய வந்தது. உடனே, Linda Elmer அதன் அருகில் பாம்பின் சென்று அதனை தூக்கி தன் தோளில் வைத்துக்கொண்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க சென்றிருக்கிறார். எனினும், அந்த பாம்பை தூக்க ஒருவரும் உதவி செய்யவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

சுமார் 18 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை மிகவும் சிரமப்பட்டு தூக்கிச் சென்றிருக்கிறார். மேலும், அந்த பெண்ணும் இதே போன்ற ஒரு பாம்பை வீட்டில் வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |