பஞ்சாப் மாநிலம் ஹேசியாபூர் மாவட்டம் பிஹம் கிராமத்திலிருந்த பஞ்சாப் நேசனல் வங்கியின் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையர்கள் ரூ.17 லட்சம் பணத்தை திருடி உள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 2:40 மணியளவில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, கொள்ளையர்கள் ஏ.டி.எம் எந்திரத்தை உடைப்பதற்கு கேஸ் கட்டரை பயன்படுத்திருக்கிறார்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக வங்கியின் துணை மேலாளரான ஜஸ்வீர் சிங் கூறியதாவது, சி.சி.டிவி காட்சியின்படி திருடர்கள் அதிகாலை 2:40 மணியளவில் காரில் வந்து எ.டி.எம்-ஐ உடைத்து ரூபாய்.17 லட்சத்தை திருடி சென்றுள்ளனர் என்று கூறினார். ஏ.டி.எம் மையத்திலுள்ள சிசிடிவி காட்சிகளையும், அதை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு மேற்கொண்டு, அதனடிப்படையில் கொள்ளையர்களை தேடி வருவதாக டி.எஸ்.பி தெரிவித்துள்ளார்.