மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெலகாவி மாவட்டம் அதானி தாலுகா ஜூவ்சரவாடா கிராமத்தைச் சேர்ந்த சதாசிவ ராமாப்பா காம்ப்ளே என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ரூபா. இவர்கள் இருவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை இவர்களது திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடைபெற்றுள்ளது. இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன் ரூபாவிற்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் பல்வேறு மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இந்த சூழலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ரூபா திடீரென மரணம் அடைந்துள்ளார். இதனால் சதாசிவம் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சதாசிவம் தீக்குளித்துள்ளார். மேலும் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விஜயாபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.