கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் ஒரு கன்னியாஸ்திரிமடம் இருக்கிறது. இங்கு உள்ள விடுதியில் கன்னியாஸ்திரிகளும், சில மாணவிகளும் தங்கி இருக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கன்னியாஸ்திரி மடத்திற்குள்ளேயிருந்து 3 பேர் சுவர் ஏறி வெளியே குதித்தனர். இதை பார்த்த காவல்துறையினர் 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், 3 பேரும் அங்கு தங்கி படித்து வரும் 3 மாணவிகளை பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.
சமூகவலைத்தளத்தின் வாயிலாக 3 பேருக்கும், மாணவிகளுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இப்பழக்கத்தை பயன்படுத்தி மாணவிகளிடம் அவர்கள் ஆசைவார்த்தைகளை கூறியுள்ளனர். இதையடுத்து இரவு நேரத்தில் மடத்திற்குள் புகுந்த அவர்கள் மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இச்சம்பவம் சில தினங்களாக நடந்துள்ளது. அந்த 3 பேரும் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 18வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் ஆவர். அதன்பின் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இதற்கிடையில் பலாத்காரம் செய்யப்பட்ட 3 மாணவிகளும் 18 வயதிற்கு குறைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.