ஓணம் பண்டிகையையொட்டி சபரி மலை ஐயப்பன் கோயிலில் அடுத்த மாதம் செப்டம்பர்7-ம் தேதிமுதல் 10ம் தேதி வரையிலும் சிறப்பு பூஜைகளானது நடைபெற இருக்கிறது. இதேபோன்று புரட்டாசி மாத பூஜைக்காக செப்டம்பர் 16ம் தேதி நடை திறக்கப்பட்டு 21ம் தேதி வரை பூஜைகள் நடைபெற இருக்கிறது.
இதன் காரணமாக இந்த தினங்களில் பக்தர்கள் தரிசனத்திற்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டு இருக்கிறது. ஆகவே முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு பம்பையில் உடனடியாக முன்பதிவு செய்ய தேவசம்போர்டு ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.