பிரபல நடிகையின் சொத்து விவரங்கள் அடங்கிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக அஞ்சலி வலம் வருகிறார். இவர் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பிறகு நடிகை அஞ்சலி தெலுங்கு சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வந்தாலும், உடல் எடை அதிகமானதால் சமீப காலமாகவே பட வாய்ப்புகள் அவருக்கு குறைந்துள்ளது. இதன் காரணமாக நடிகை அஞ்சலி தன்னுடைய உடல் எடையை குறைத்து மீண்டும் படங்களில் நடிப்பதற்கு முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இருப்பினும் அஞ்சலிக்கு எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்நில்லையில் நடிகை அஞ்சலியின் சொத்து விவரங்கள் குறித்த ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி அஞ்சலியின் மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 10 கோடி ஆகும். கடந்த 15 வருடங்களாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து வரும் நடிகை அஞ்சலியால் வெறும் 10 கோடி தான் சொத்து சேர்த்து வைக்க முடிகிறதா என ரசிகர்கள் பலர் இணையத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் நடிகை அஞ்சலி ஒரு படத்திற்கு ரூபாய் 50 முதல் 80 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.