Categories
மாநில செய்திகள்

செல்லப்பிராணி வளர்ப்போர் கவனத்திற்கு….. இனி கட்டணம் உண்டு….. சென்னை மாநகராட்சி அதிரடி….!!!

பெரும்பாலும் அனைவருடைய வீடுகளில் செல்லப்பிராணிகளாக நாய், பூனை போன்ற ஏதாவது ஒன்றை வளர்ப்பது உண்டு. இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் விதிகளின்படி செல்லப்பிராணிகள் வைத்திருப்பவர்கள் அதற்கான உரிமத்தை பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும் செல்லப்பிராணிகளுக்கான உரிமம் கட்டணம் 50 ரூபாய் என்ற வகையில் வருடத்திற்கு ஒருமுறை புதுப்பிக்கும் முறையில் , திரு.வி.க. நகர், நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் மற்றும் கண்ணம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் செல்லப்பிராணிகளின் சிகிச்சை மையங்களிலும் வழங்கப்படுகிறது.என அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மையங்களில் அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி (Anti Rabies Vaccine) முற்றிலும் இலவசமாக செலுத்தப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |