Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“ஆற்றில் பிணமாக தொங்கிய தாய்”…. துக்கம் தாங்காமல் மகன் எடுத்த முடிவு…. தஞ்சாவூரில் பெரும் பரபரப்பு….!!!!

தாய் மற்றும் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாலைத்துறை பகுதியில் வசந்தா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3  மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் வசந்தா நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த வசந்தா நேற்று குடமுருட்டி ஆற்றுப்பகுதிக்கு சென்று அங்கு அமைந்துள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் வசந்தாவின் 2-வது மகனான அன்பரசன் தனது தாயை பல இடங்களில் தேடியுள்ளார்.

ஆனால் வசந்தா கிடைக்கவில்லை. இதனையடுத்து அன்பரசன்  ஆற்றுப்பகுதிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது வசந்தா மரத்தில் பிணமாக  தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அன்பரசன் துக்கம் தாங்க முடியாமல் அவரும் அதே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வசந்தாவின் மற்றொரு மகன் விஜயராகவன்  காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அன்பரசன், வசந்தா ஆகிய 2  பேரின் சடலத்தையும்  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |