ஆப்கானிஸ்தான் நாட்டில் 2.3 கோடிக்கும் மேற்பட்ட இணையதளங்கள், தலீபான் அரசாங்கத்தால் முடக்கப்பட்டிருக்கிறது.
தலீபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியதிலிருந்து அங்கு கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் கல்வி கற்பது, பணிபுரிவது, வெளியிடங்களுக்கு தனியாக செல்வது போன்ற பல உரிமைகளுக்கு தடை விதித்தனர். இது மட்டுமல்லாமல் இணையதளங்கள் மற்றும் ஊடகங்களையும் முடக்கி வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த வருடத்தில் ஒழுக்கக்கேடான விஷயங்களை காண்பிப்பதாக சுமார் 2.3 கோடிக்கும் மேற்பட்ட இணையதளங்களை முடக்கியுள்ளனர். இதனை தகவல் தொடர்பு அமைச்சராக இருக்கும் நஜிபுல்லா ஹக்கானி உறுதிப்படுத்தியிருக்கிறார். அவர் தெரிவித்ததாவது, தற்போது வரை நாட்டில் 2.34 கோடி இணையதளங்கள் முடக்கப்பட்டிருக்கிறது.
ஒரு இணையதளத்தை தடுத்தால் மற்றொரு பெயரில் அது தொடங்கப்படுகிறது. எனினும் ஒழுக்கக்கேடான விஷயங்களை காண்பிக்கும் இணையதளங்கள் இயங்க அனுமதி கிடையாது என்று கூறியிருக்கிறார்.