Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கு….. பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு ஜாமீன்..!!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உததரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே கனியாமூர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13ஆம் தேதி பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தற்கொலை என பள்ளி தரப்பில் கூறப்பட்டாலும், இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டு பெற்றோர் தரப்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் 4 நாட்களுக்கு பின் 17ஆம் தேதி வன்முறையாக மாறி பள்ளி சூறையாடப்பட்டது.. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் மற்றும் இரண்டு ஆசிரியைகள் கைது செய்யப்பட்டனர்..

இதற்கிடையே  தங்களுக்கு பிணை வழங்க வேண்டும் என்று பள்ளி தரப்பில் விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஜாமீன் வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.. இந்நிலையில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிப்பதாக அறிவித்துள்ளார்..

பல்வேறு கட்ட வாதங்களை முன்வைத்த பிறகு இன்று அவர்களுக்கு பிணை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது என்ன காரணத்துக்காக இவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்? என்ற கேள்வியை நீதிமன்றம் எழுப்பி இருந்தது. இதற்கு சிபிசிஐடி தரப்பில், மாணவி மரணம் பள்ளி வளாகத்தில் நடந்திருப்பதால் பள்ளி நிர்வாகிகளும், ஆசிரியர்கள் நான் பொறுப்பாவார்கள் என்று தான் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதனால் தான் வழக்கு பதியப்பட்டது. எனவே கைது செய்யப்பட்டதற்கான  முகாந்திரம் இருப்பதாகவும், ஜாமீன் வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது..

மேலும் மாணவி மரணம் தொடர்பாக சந்தேகம் மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டுள்ளதாகவும், பாலியல் தொல்லை அல்லது கொலை என்று தெரியவந்தால் வழக்கு கொலை வழக்காக  மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றும் உத்தரவாதம் அளித்து விசாரணை முறையாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

 

 

Categories

Tech |