Categories
தேசிய செய்திகள்

அட இது தெரியாம போச்சே….! யாரும் டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க….. ஜாலியா தூங்கலாம்…. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க….!!!!

இந்தியாவில் போக்குவரத்து என்பது மக்களின் இன்றியமையாத தேவையாக மாறிவிட்டது. இந்த போக்குவரத்து சேவையில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் பயணிகள் வசதியாக செல்வதுடன் கட்டணமும் குறைவாக வசூலிக்கப் படுகிறது. இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் நாள்தோறும் ரயிலில் செல்வதால் ரயில்வே நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக பல்வேறு விதமான சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் இரவு நேர பயணிகளுக்காக ரயில்வே நிர்வாகம் ஒரு புதிய வசதியை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது. அது பற்றி தற்போது பார்க்கலாம். அதாவது ரயிலில் பயணம் செய்யும் போது இரவு நேரத்தில் பயணிகள் தூங்க முடியாமல் சற்று சிரமத்திற்கு ஆளாவார்கள்.

இந்த பிரச்சனை நடுத்தர பெர்த், ஸ்லீப்பர் கோச் மற்றும் மூன்றாவது ஏசி தான் ஏற்படுகிறது. இந்நிலையில் கீழ் சீட்டில் உட்கார்ந்து இருப்பவர் இரவு நீண்ட நேரம் இருக்கையில் அமர்ந்து இருந்தால் நடு பெர்த்தில் இருபவரால்  ஓய்வெடுக்க முடியாது.  இதேப்போன்று நடு பெர்த்தில் இருக்கும் பயணிகள் இரவு நீண்ட நேரம் வரை கீழ் பெர்த்தில் அமர்ந்திருப்பார்கள். இதனால் பயணிகள் தூங்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாவார்கள். இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதற்காக தான் ரயில்வே நிர்வாகம் ஒரு விதிமுறையை வகுத்துள்ளது. அதாவது காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடு பெர்த்தை திறந்து கொள்ளலாம்.

நீங்கள் கீழ் பெட் பயணியாக இருந்தால் இரவு 10 மணிக்கு மேல் பயணிகள் நடு பெட் மற்றும் மேல் பெட் பயணிகளால் உங்கள் இருக்கையில் அமர முடியாது. இந்த விதிமுறையை கூறி உங்களுடைய இருக்கையில் யாராவது அமர்ந்திருந்தால் அவர்களை வெளியேற சொல்லலாம். இதேபோன்று பகல் நேரத்தில் நடு பெர்த்தை யாராவது திறந்தாலும் கீழ் பெர்த்தில் இருப்பவர் அதை தடுக்கலாம். இந்த விதிமுறை பயணிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை நிம்மதியாக தூங்குவதற்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை டிடிஆர் கூட உங்களை தொந்தரவு செய்ய முடியாது.

Categories

Tech |