சமீபத்தில் விபத்துக்கள் அதிகமாக ஏற்படுகின்றது. இதனால் அதிகமானோர் உயிர் இழக்கின்றனர். அதற்கு காரணமாக முன்வைக்கப்படுவது ஹெல்மெட் அணியாமல் இருப்பதுதான். ஹெல்மெட் அணிவது மிக அவசியமானது. எனவே ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலிஸ் தரப்பில் அடிக்கடி அறிவுறுத்தி வரும் நிலையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார். அதன்படி நேற்று முந்தினம் காலை கோவை-திருச்சி ரோட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர் ஹெல்மெட் அணிந்து வருகிறார்களா? என்று கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் வந்த பெற்றோரிடம் ஹெல்மெட் அணிந்து குழந்தைகளை பாதுகாப்புடன் அழைத்து வருமாறு அறிவுறுத்தினார்.மேலும் பள்ளி மாணவ-மாணவிகளின் குறைகளை கேட்டார். வேன்களில் அழைத்து வரும் டிரைவர்களிடமும் போலீஸ் கமிஷனர் விசாரணை விசாரணை நடத்தினார். இதனையடுத்து பள்ளி அருகில் உள்ள போதைப்பொருட்கள் நடமாடத்தை கட்டுப்படுத்தவும், விபத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் கமிஷன் ஆலோசனை வழங்கினார்.