ஈரோடு அருகேயுள்ள வீரப்பம்பாளையத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சென்ற 2020-ம் வருடம் செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி காவல்துறையினர் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணை தடுத்துநிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்தபெண் வந்த மோட்டார்சைக்கிளில் 16 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் காவல்துறையினர் அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர், ஈரோடு பள்ளி பாளையத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவரின் மனைவி பூங்கோதை (46) என்பதும், கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.
அதனை தொடர்ந்து காவல்துறையினர் பூங்கோதையை கைது செய்ததுடன், அவர் கடத்தி வந்த 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கோவையிலுள்ள இன்றியமையா பண்டங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணை முடிந்ததை அடுத்து தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட பூங்கோதை கஞ்சா கடத்தி வந்தது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவருக்கு, ரூபாய் 1 லட்சம் அபராத தொகையும், அதனை கட்டத்தவறினால் 6 மாதம் கடுங் காவல் தண்டனையும், கஞ்சா கடத்த இருசக்கர வாகனத்தை பயன்படுத்திய பிரிவுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.