Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்படிலாம் பேசக் கூடாது… நான் மண்டியிட மாட்டேன்…! போராடுவேன் என சீமான் ஆவேசம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இங்கு சமஸ்கிருதத்தில் வழிபாடு நடத்த வேண்டும்,  சமஸ்கிருதம் தான் தேவபாசை, இதெல்லாம் பேசக்கூடாது. எல்லா மொழி வழி மாநிலங்களும் இந்தியாவில் பிரிக்கப்பட்டிருக்கிறது, அவர் தெலுங்கர் அவருக்கு மாநிலம், அவர் கன்னடர் அவருக்கு மாநிலம்,

அவர் மலையாளி அவருக்கு மாநிலம், அவர் பீகாரி அவருக்கு மாநிலம், அவர் குஜராத்தி அவருக்கு மாநிலம் என்று எல்லோருக்கும் மாநிலம் இருக்கிறது, நாங்கள் தமிழன் எங்களுக்கு ஒரு தாயகம் இருக்கிறது, எங்களுக்கு ஒரு மாநிலம் இருக்கிறது. சமஸ்கிருதத்திற்கு எந்த மாநிலம் இருக்கிறது, எந்த மாவட்டம் இருக்கிறது. சும்மா அதுதான் மொழி. அதில் தான் வழிபட வேண்டும் என்பதெல்லாம் கிடையாது.

யாரையும் வழிபாடு செய். என் தாய் மொழியில் வழிபாடு. இதுதான் எங்கள் முதன்மையான செயல்பாட்டினுடைய நோக்கம். அது கோரிக்கை வைத்து, மண்டியிட, வேண்ட தயாராக இல்லை. இது எங்களுடைய உரிமை, இதை அடையும் வரை நாங்கள் தொடர்ச்சியாக போராடுவோம். இதுதான் நான் செய்ய போறது என தெரிவித்தார்.

Categories

Tech |