ஆசிய கோப்பையில் நிச்சயம் விராட் கோலி மிகச் சிறப்பாக ஆடுவார் என்று சேன் வாட்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்..
கிரிக்கெட்டில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான ரன் மெஷினாக பார்க்கப்படும் விராட் கோலி தற்போது ஃபார்மை இழந்து தவித்து வருகிறார். சமீபகாலமாகவே அவரது ஃபார்ம் மிக மோசமாக இருக்கிறது சர்வதேச கிரிக்கெட்டில் சாதாரணமாக சதம் விளாசும் கோலி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக சதம் அடிக்காமல் இருப்பது அவரது ரசிகர்களை கவலையடைய செய்திருக்கிறது.. கடைசியாக இங்கிலாந்து தொடரில் கூட அவர் மோசமாக தான் பேட்டிங் செய்தார்.. இதன் காரணமாக அவருக்கு கடைசியாக நடந்த ஜிம்பாப்வே தொடருக்கான அணியில் இருந்து ஓய்வு வழங்கப்பட்டது..
இந்நிலையில் கிட்டத்தட்ட ஒரு மாத ஓய்வுக்குப் பின் ஆசிய கோப்பையில் களமிறங்க இருக்கிறார் கோலி.. இதனால் மீண்டும் விராட் கோலி இந்த ஆசிய கோப்பையில் தனது அதிரடி பேட்டிங்கால் பார்முக்கு திரும்புவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்..
இதற்கிடையே விராட் கோலியின் ஃபார்ம் குறித்து பலரும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேன் வாட்சன் விராட் கோலி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.. இது குறித்து அவர் பேசியதாவது, விராட் கோலிக்கு நல்ல ஓய்வு வழங்கப்பட்டு இருப்பதால் அவர் மனதளவிலும் உடலளவிலும் புத்துணர்ச்சியோடு தற்போது இருப்பார். ஐபிஎல் போட்டியின் போது கூட விராட் கோலியின் ஆட்டம் சற்று குறைந்திருந்தது.. அதுமட்டுமில்லாமல் ரன் குவிப்பதிலும் தடுமாறினார் கோலி.
அதனை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டிலும் அந்த தடுமாற்றம் தொடர்ந்து கொண்டே வந்தது. ஆனால் தற்போது ஒரு மாதம் வரை நல்ல ஓய்வு அவர் எடுத்திருந்ததால் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று இருப்பார் என்று நான் நம்புகிறேன். தரம் வாய்ந்த வீரரான கோலி ஃபார்முக்கு திரும்புவது மிக எளிதான ஒன்றுதான்.. எனது கணிப்பின்படி ஆசிய கோப்பையை இந்திய அணியே வெல்லும்.. ஆசிய கோப்பையில் நிச்சயம் விராட் கோலி மிகச் சிறப்பாக ஆடுவார் என்று அவர் கூறியுள்ளார்.