Categories
தேசிய செய்திகள்

அந்தரங்க விஷயம்….. சாமியார் வெளியிட்ட வீடியோ…. பொதுமக்கள் அதிருப்தி….!!

மகாராஷ்டிராவில் அந்தரங்க விஷயங்கள் குறித்து சாமியார் ஒருவர் பேசிய பேச்சுக்கு அம்மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சாமியார் இந்துக்கரி  மகராஜ். இவர் அப்பகுதியில் பிரபலமானவர். ஆன்மீக ரீதியாக இவரிடம் பல பக்தர்கள் நாள்தோறும் வந்து ஆலோசனை கேட்டு செல்வர். அந்த வகையில் இவர் சமீபத்தில்இவர்  வெளியிட்ட வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதில் சுபநேரம் அல்லாத மற்ற நேரங்களில் உறவு கொண்டால் பிறக்கும் குழந்தைக்கும், குடும்பத்திற்கும் ஆகாது  என்றும், இரட்டைப்பட எண்களில் உறவு கொண்டால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இவரது இந்த பேச்சு மூடநம்பிக்கையை ஊக்குவிப்பதாக இருப்பதால் அம்மாநில மக்கள்  இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |