நாளை காதலர் தினத்தை முன்னிட்டு அதிக ஜோடிகள் ரூம் புக் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை பிப்ரவரி 14 காதலர் தினம் இதற்கு முந்தைய காலகட்டங்களில் எல்லாம் காதலர் தினம் என்றாலே பீச், பார்க், சினிமா தியேட்டர் போன்ற இடங்களுக்கு தான் ஜோடிகள் செல்வார்கள். ஆனால் தற்போது OYO என்னும் ரூம் புக்கிங் செயலியில் காதலர்கள் பிப்ரவரி14 ஐ முன்னிட்டு அனைத்து இடங்களிலும் அதிக அளவில் ரூம் புக்கிங் செய்துள்ளனர்.
அனைத்து மாநிலங்களையும் கணக்கில் வைத்துப் பார்க்கும் பொழுது 97.5 சதவீதம் ரூம் ஜோடிகளால் புக் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதனை OYO நிறுவனமே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இது குறித்து ஒரு சிலர் கருத்து தெரிவிக்கையில், வெளியிடங்களில் பேசுவதற்கும் பழகுவதற்கும் தொந்தரவு அதிகமாக இருக்கிறது என்றும், நாளை ஒரு நாள் நாங்கள் எங்களது மனதுக்கு பிடித்தவர்களுடன் சந்தோசமாக இருக்க நினைக்கிறோம் அதனால் தான் இந்த முறையை கையாண்டு உள்ளோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.