Categories
சினிமா

“ஒரேயடியாக சம்பளத்தை உயர்த்திய விஜய்”….. எத்தனை கோடி தெரியுமா….????

நடிகர் விஜய் தேவரகொண்டா தன் சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்தி இருப்பது தெரியவந்துள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லைகர் என்ற திரைப்படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். இந்த படத்தில் அனன்யா பாண்டே ஹீரோயினாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன் மற்றும் மைக் டைசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டப்படி படம் நேற்று வெளியானது.

இந்த நிலையில் படத்தை பார்த்தவர்கள் விஜய்யின் நடிப்பை தவிர இதில் ஒன்றுமே இல்லை என்று கூறுகின்றார்கள். மேலும் எதிர்பார்த்த அளவிற்கு இத்திரைப்படம் இல்லை என இணையத்தில் விளாசி வருகின்றார்கள் ரசிகர்கள். இத்திரைப்படத்தின் வாய்ப்பு வருவதற்கு முன்பாக விஜய் தேவரகொண்டா படம் ஒன்றிற்கு 6 முதல் 7 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த நிலையில் லைகர் படம் தெலுங்கு மற்றும் இந்தியில் ரிலீஸ் ஆகி உள்ளதற்கு 25 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். இத்திரைப்படம் வெற்றி பெற்றால் தன் சம்பளத்தை மேலும் உயர்த்த திட்டமிட்டிருந்தாராம் விஜய். ஆனால் படத்தை பார்த்த பலரும் இதெல்லாம் ஒரு படமா என விளாசி வருகின்றார்கள். விஜய்க்கு 25 கோடி கொடுத்தது தவறு இல்லை எனவும் படத்தின் பலமே விஜய்யின் நடிப்புதான் என ரசிகர்கள் கூறுகின்றார்கள்.

Categories

Tech |