கோமாளி திரைப்படத்திற்காக 18 கிலோ வரை எடை குறைத்ததாக பேட்டி ஒன்றில் ஜெயம் ரவி கூறியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் ஜெயம் ரவி. இவர் ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி ரசிகர்களைக் கவர்ந்தார். இதன் பின் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். இவர் இடையில் சில சறுக்கல்களை சந்தித்தாலும் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார். தற்பொழுது அகிலம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படமானது வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் ஜெயம் ரவி பேட்டி ஒன்றில் கோமாளி திரைப்படம் குறித்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது, கோமாளி திரைப்படத்திற்காக இரண்டு வாரத்தில் 18 கிலோ வரை எடை குறைத்ததாக தெரிவித்திருக்கின்றார். மேலும் இதற்காக கேரட், தக்காளி மட்டுமே இரண்டு வாரங்களுக்கு எடுத்து கொண்டதாக கூறியுள்ளார். இதை சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் வேறு யாரும் முயற்சி செய்ய வேண்டாம் எனவும் தெரிவித்திருக்கின்றார்.