Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“உளுந்தூர்பேட்டை அருகே மின் மோட்டாரை திருடிய ஆசாமி”…. தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்….!!!!!!

உளுந்தூர்பேட்டை அருகே மின் மோட்டாரை திருடிய ஆசாமிக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் அயன்வேலூர் கிராமத்தில் அண்மைக்காலமாகவே மின் மோட்டார்கள் திருடப்பட்டு வந்தது. இதனால் கிராம மக்கள் குழுவாகப் பிரிந்து இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள்.

இந்நிலையில் பரமசிவம் என்பவரின் வீட்டின் முன்பு இருந்த மின்னோட்டாரை அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் திருடிக் கொண்டிருக்கும் பொழுது பொதுமக்கள் அவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர். பின் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்கள். இதை தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தார்கள். இதையடுத்து மின் மோட்டாரை பறிமுதல் செய்தார்கள்.

Categories

Tech |