Categories
அரசியல் மாநில செய்திகள்

பஸ்ல டிக்கெட் கொடுக்குறீங்களா ? அல்ல ஜாதி சான்றிதழ் கொடுக்குறீங்களா ? நாம் தமிழர் பரபரப்பு குற்றச்சாட்டு ..!!

கன்னியாகுமாரி மாவட்டத்தில் நடைபெறும் தாதுமணல் கொள்ளையை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் பேசிய அக்கட்சி நிர்வாகி காளியம்மாள், கேரளாவில் இருக்கக்கூடிய அதானி விலிங்கம் துறைமுகத்திற்கு இங்கிருந்து கல்லு போகுது. உங்கள் ஆட்சியும்,  உங்கள் அதிகாரமும் எங்களுக்கு வெட்ட வெளிச்சமாக தெரிந்து விட்டது.

நீங்கள் பேருந்துக்கு என்னைக்கு லிப்ஸ்டிக் போட்டிங்களோ அன்றையோடு முடிந்து விட்டது. ஒண்ணுமே இல்லாத ஊராட்சி, ஒரு அரசு மருத்துவமனை கூட கிடையாது, அது ஏற்கனவே வளர்ச்சி அடைந்த பகுதி. எப்படிங்க சொல்றீங்க ? நாங்க நாலு வழி சாலை போடுறோம். எங்கிருந்துங்க நாலு வழி சாலை போடுறீங்க,

எங்களுக்கு போகிறதுக்கே பணம் இல்லைங்க, நீங்க பஸ்ல இலவசம்னு சொன்னீங்க சரின்னு ஏறி உக்காந்தா, இப்ப சொல்றீங்க 80 விழுக்காடு ஆதிதமிழ் குடி மக்களுக்கு என… ஜாதி சான்றிதழ் கொடுக்குறீங்களா ? பஸ்ல ஏறும் போது டிக்கெட் கொடுக்குறீங்களா ? ஜாதி சான்றிதழ் கொடுக்குறீங்களா ?

பேருந்தில் பயணம் எடுக்க முடியாத சூழ்நிலையில் இருந்தவர்கள் எல்லாம்,  ஆதி தமிழ் குடிமக்களாகத்தான் இருக்க முடியும் என்று நிர்பந்திக்கிறீர்களா எங்களை ? சாதியை சொல்லி இவர்கள் வறுமை கோட்டுக்கு கீழ் தான் இருக்கணும் என்று எங்களை கட்டையில இடுகிறீர்களா ?  என்ன சொல்ல வருகின்றீர்கள் என கேள்வி எழுப்பினார்.

Categories

Tech |