Categories
அரசியல் மாநில செய்திகள்

களமிறங்கிய சீமான்.. பதறிய DMK அமைச்சர்.. உண்மையை போட்டுடைத்த காளியம்மாள்…!

கன்னியாகுமாரி மாவட்டத்தில் நடைபெறும் தாதுமணல் கொள்ளையை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் பேசிய அக்கட்சி நிர்வாகி காளியம்மாள், ஒரு கிலோமீட்டர் அளவுக்காவது தூண்டில் வளைவு அமைத்துக் கொடுத்தால் மட்டும்தான் வாடைக்காற்று நாட்களில், எங்களால் படகை சரிவர கொண்டுவர முடியும் என்று கடலோடி சொல்கிறான். இவர்கள் தற்குறி என்று தள்ளி வைத்த நாங்கள் சொல்கிறோம்.

அத்தனை விஞ்ஞான படைத்தவர்களால் அதை கட்டமைக்க முடியவில்லை. 15 உயிர்கள் பழி போயிருக்கிறது. எங்கோ ஒரு மூலையில் இருக்கிறார்கள் நாம் தமிழர் கட்சி என்கிறார்கள். சின்ன பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து உருவாக்குகிறது அப்படின்னு சொல்றாங்க. நேத்து போன உடனே அமைச்சர் மனோஜ் தங்கராஜ் அவர்கள் வந்துவிட்டார் லைன்ல. 240 கோடி ஒதுக்கி இருக்குறோம்ங்க. எங்க ஒதுக்கி வச்சிருக்கீங்க ?

இல்லங்க அங்க ஒரு 50 லட்சம் ங்க, இங்க ஒரு 40 லட்சம்ங்க,  செஞ்சிட்டோம்ங்க செஞ்சிட்டோம். செஞ்சிட்டோம்னு பதற வைத்துவிட்டது நாம் தமிழர் கட்சி. ஒருவன் ஒரே ஒருவன் கால் வைத்த உடனேயே உங்களுக்கு கதி கலங்கிவிட்டது. எல்லோரும் போய் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆயிட்டாங்க. காவிரி மருத்துவமனையே நிரம்பிரும் போல இருக்கு. எனா அரசு மருத்துவமனைக்கு இவர்கள் போக மாட்டார்கள் என விமர்சித்தார்.

Categories

Tech |