Categories
சினிமா தமிழ் சினிமா

“பல மடங்கு சம்பளத்தை உயர்த்திய த்ரிஷா”…. காரணம் அந்த நடிகர்தானாம்….!!!!!

நடிகை திரிஷா தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

நடிகை த்ரிஷா தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை ஆவார். சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக உள்ளார் த்ரிஷா.

பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் த்ரிஷா தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. 16 வருடங்களுக்கு பிறகு தற்பொழுது விஜய் படத்தில் இணைந்து நடிக்க இருக்கின்றார். விஜய் உடன் இணைந்து நடித்த பிறகு தனது மார்க்கெட் எதிரும் என்பதால் நடிகை திரிஷா தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி இருப்பதாக சொல்லப்படுகின்றது.

இந்நிலையில் திரிஷாவை தங்களின் படங்களுக்கு அணுகிய இரண்டு தயாரிப்பாளர்கள் அவர் சொன்ன சம்பளத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்துவிட்டார்களாம். மேலும் யோசித்து சொல்கிறோம் என கூறிவிட்டு அங்கிருந்து வந்து விட்டார்களாம். 40 வயதை நெருங்க உள்ள த்ரிஷா காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதற்கு ஏற்ப செயல்படுகின்றார் என கோடம்பாக்கத்தினர் கூறுகின்றார்கள்.

Categories

Tech |