Categories
அரசியல் மாநில செய்திகள்

அள்ளாதீங்கன்னா… அள்ளுறீங்க… எங்களை விட அவுங்களுக்கு அறிவு இருக்கா ? – சீமான் விமர்சனம்

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேங்காய் பட்டினத்தில் உங்களுக்கு தெரியும், இறையுமன் துறைமுகத்தில் 27 மீனவர்கள் இதுவரை இறந்திருக்கிறார்கள்.  நாங்கள் எப்போதாவது இறந்து போகிறோம், எங்களுக்கு பாதுகாப்பாக மீன்பிடிக்க துறைமுகம் வேண்டும் என்று என் மக்கள் போராடிய போராட்டத்தின் விளைவு தான் அந்த துறைமுகம். துறைமுகம் வந்த பிறகு எங்களுடைய இறப்பு விகிதம் அதிகரிக்கிறது, இதற்கு காரணம் என்ன ?

துறைமுகத்தை பொறுப்புணர்வோடு, உரிய கட்டுமானத்தோடு கட்டாமல், தான்தோன்றித்தனமாக,  மீனவர்களுக்கு ஒன்றும் தெரியாது, அறிவற்றவர்கள் என்று நினைத்து, கடலோடு வாழுகிறவர்கள் நான்,  எனக்கு தான் என்னவென்று தெரியும். என்னிடம் கேட்காமல் அங்கிருந்து வந்தார் பொறியாளர், அந்த நாட்டுக்காரர்கள் என்று சொந்த நாட்டுக்காரர்கள் எனக்கு இருக்கிற அறிவு அவர்களுக்கு எப்படி இருக்கும்?

எப்படி தடுப்பு  சுவரை அமைக்க வேண்டும் என்ற அடிப்படை இல்லாமல் கட்டி, எங்களுக்கு 40 மீட்டர் தான் முகப்பேர் கழிமுகம் இருக்கிறது. அதற்குள் தான் வெளியில் போகவேண்டும், உள்ளே வர வேண்டும். குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு கடல் அலை தடுப்புச் சுவற்றை நகர்த்திக் கொண்டு போகணும், குறைந்தபட்சம் 300 மீட்டருக்கு கழிமுகம் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

அங்கே தாமிரபரணி ஆறு கலப்பதினால் அங்கே மண்ணு சேமித்து மேடாக இருக்கிறது, அந்த மண்ணை அள்ளுங்கள் என்கிறோம் அதை அள்ளவில்லை. கடற்கரையில் இருக்கின்ற தாதுமனை அள்ளாதீர்கள் என்கின்றோம், அதை அள்ள வேண்டும் என்கிறார்கள், மலையை  நொறுக்கி மணலை அள்ளாதீர்கள் என்கிறோம்,  அதை அள்ளுகிறார்கள் இது எவ்வளவு வேடிக்கை என்பதை பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.

Categories

Tech |