Categories
சினிமா தமிழ் சினிமா

மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனை…. பாரதிராஜாவுக்காக உருகிய ராதிகா…. இணையத்தில் வீடியோ வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் 16 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. அதன் பின் பாரதிராஜா முதல் மரியாதை, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், நிழல்கள், புதிய வார்ப்புகள் என ஏராளமான திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பாரதிராஜாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இவர் சென்னை தி.நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பாரதிராஜாவின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், ஓரிரு நாட்கள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்புவார் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை ராதிகா இயக்குனர் பாரதிராஜா விரைவு குணமடைந்து வீடு திரும்ப வேண்டி பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்துள்ளார். இது தொடர்பான வீடியோவை இணையதளத்தில் பகிர்ந்த ராதிகா, என் இனிய இயக்குனர் பாரதிராஜா அவர்களே, நீங்கள் விரைவில் குணமடைய என்னுடைய சிறப்பு பிரார்த்தனை, உங்களை நான் ரொம்ப மிஸ் பண்றேன். உங்களை விரைவில் காண வேண்டும் என்று பதிவு செய்துள்ளார். மேலும் இயக்குனர் பாரதிராஜாதான் ராதிகாவை தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

Categories

Tech |