Categories
தேசிய செய்திகள்

விடிந்தால் நிச்சயதார்த்தம்… பட்டதாரி பெண் மாயம்

நிச்சயத்திற்கு முதல் நாள் காணமால் போன பெண்ணை கண்டுபிடிக்க தாய் புகார்

புதுச்சேரி முத்தியால்பேட்டை சேர்ந்தவர் அருள்மணி இவரது மகள் ஜெயதேவி. எம்.காம் படித்துள்ள ஜெய தேவியின் தந்தையார் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த நிலையில் தாய் அருள்மணி வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி உள்ளார்.

இதற்கிடையே மகளுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணி மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் நடக்க இருந்தது. நிச்சயத்திற்கு ஒரு நாள் முன்பு தோழி வீட்டிற்கு சென்று வருவதாக கூறி வெளியில் சென்றுள்ளார் ஜெயதேவி. வெகுநேரமாகியும் வீடு திரும்பாத ஜெயதேவியை  தோழிகளின் வீடு உறவினர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியுள்ளார் அருள்மணி.

ஜெயதேவி காணாமல் போன அன்று புதுவையில் ஈஸ்வரன் கோவில் அருகே ஒரு வாலிபருடன் பேசிக் கொண்டிருந்தது தெரிய வந்ததையடுத்து பெரியகடை காவல்துறையினரிடம் அருள்மணி தனது மகளை ஜெயக்குமார் என்ற வாலிபன் கடத்திச் சென்றுள்ளார் என புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |