Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல இயக்குனரின் தாயார் காலமானார்….. பெரும் சோகம்…!!!!

இயக்குனர் ஷாஜி கைலாஸின் தாயார் ஜானகி எஸ்.நாயர் காலமானார்.

தென்னிந்திய திரைப்பட இயக்குனர் ஷாஜி கைலாஸின் தாயார் ஜானகி எஸ் நாயர் (88) காலமானார். இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. இவர் கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தனர். இன்று மாலை தைக்காடு சாந்தி வாயிலில் அடக்கம் நடக்கிறது.
கப்பா என்ற சினிமா படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ஷாஜி கைலாஸ் தனது தாயின் மரணம் குறித்து அறிந்தார். உடனே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ஷாஜி கைலாஸ் மற்றும் படக்குழுவினர் குக்கன்கோணத்தில் உள்ள வீட்டிற்கு வந்தனர்.

ஜானகியம்மாவின் மறைவுக்கு மலையாள திரைப்பட இயக்குநர்கள் சங்கம் அஞ்சலி செலுத்தியது. சினிமா மற்றும் கலாசாரத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் வீட்டுக்குச் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர். இயக்குனர் ஷாஜி கைலாஸ் தமிழில், விஜயகாந்துடன் வாஞ்சிநாதன், அஜித்துடன் ஜனா, எல்லாம் அவன் செயல், என் வழி தனி வழி, வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

Categories

Tech |