பாம்புகளை கடத்தி சென்ற நபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தெற்கு கலிபோர்னியாவில் ஜோஸ் மானுவல் பெரெஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம் மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்கு பாம்புகள், முதலை பள்ளிகள் போன்ற 60-க்கும் மேற்பட்ட உயிரினங்களை கடத்த முயற்சி செய்துள்ளார். இவற்றின் மொத்த மதிப்பு 75 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
இவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில் 1700 விலங்குகளை சட்ட விரோதமாக அமெரிக்காவிற்கு கடத்தியது தெரியவந்தது. இந்த கடத்தல் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ஜோஸ் மானுவல் பெரெஸ்க்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.