தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளியான “சிறுத்தை” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. அதன் பிறகுஅஜித் நடிப்பில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுபிக் ரேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இயக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.
இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த படம் குறிந்து சிறுத்தை சிவா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “திரைப்பட படப்பிடிப்பு நடக்கும் வெளிப்புற மற்றும் ஸ்டூடியோ தளங்களில் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான ஒலி மாசு அற்ற பகுதியாக மாற்ற நாம் உறுதி ஏற்போம். அதை சாத்தியப்படுத்த அதிக சத்தம் எழுப்பும் ஒலி எழுப்புகளை படப்பிடிப்பு தளங்களில் தவிர்த்து படக்குழுவினருக்கும் பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்படாமல் காப்போம். மேலும் ஒளி மாசை ஒழிப்போம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.