கனியாமூர் மெட்ரிக் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் இரண்டாவது பிரத பரிசோதனை அறிக்கை விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் மாணவியின் இரண்டாவது பிரத பரிசோதனை அறிக்கை ஆனது வெளியாகி இருக்கிறது. முதலில் செய்யப்பட்ட பிரத பரிசோதனை அறிக்கைக்கும், இரண்டாவதாக செய்யப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை சிறு வேறுபாடுகள் உள்ளதாகவும், தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்திய மாணவி மரண விவகாரத்தில் தற்போது புதிய ஒரு தகவலாக, இரண்டாவது பிரத பரிசோதனை அறிக்கை ஆனது வெளியாகியிருக்கிறது.
முதல் பிரேத பரிசோதனையில் சில காயங்கள் தொடர்பாக எழுந்த குழப்பங்களுக்கு இரண்டாவது பிரேத பரி சோதனையில் விளக்கம் அளித்ததாகவும் கருதப்படுகின்றது. முதல் பிரேத பரிசோதனையில் வலது நெஞ்சில் காயம் இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இரண்டாவதாக செய்யப்பட்ட பிரேத பரிசோதனையில் இடது நெஞ்சில் காயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மாணவியின் பெற்றோர் உட லில் காயங்கள் இருப்பதாக புகார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அந்த காயங்கள் குறித்தான விவரங்களும், விளக்கங்களும் இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கயில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. நெஞ்சு எலும்புகளில் ஏற்பட்ட காயத்தை பகுதி பகுதியாக இரண்டாவது பிரேத பரிசோதனையில் விளக்கங்கள் தரப்பட்டுள்ளது. மாணவியின் உடலில் ரத்த கட்டு காயங்கள் இருந்ததாக முதல் பரிசோதனையில் கூறப்படவில்லை. மாணவியின் இடுப்பு எலும்பில் முறிவு இருந்ததாகவும் இரண்டாவது பிரத பரிசோதனையில் சொல்லப்பட்டுள்ளது.