யுபிஎஸ்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
யுபிஎஸ்சி மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது. இந்த மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை எழுதுபவர்கள் ஒவ்வொரு முறை விண்ணப்பிக்கும் போதும் தங்கள் விவரங்களை பூர்த்தி செய்வதால் நேரம் வீணாகிறது என்றும், தவறு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர். இதன் காரணமாக யுபிஎஸ்சி நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி மத்திய அரசு தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் ஒருமுறை மட்டுமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்தால் போதுமானது. இந்த தகவல்கள் இணையதளத்தில் சேமித்து வைக்கப்படும். இதன் காரணமாக ஒவ்வொரு முறை தேர்வு எழுதும் போதும் தங்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. மேலும் யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இணையதளம் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.