Categories
சினிமா தமிழ் சினிமா

ஐக்கிய அரபு அமீரகத்தின் சிறப்பு கௌரவம்…. பிரபல நடிகைக்கு கோல்டன் விசா….!!!

பிரபல நடிகைக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் சிறந்து விளங்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் 10 வருடங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள். இந்த கோல்டன் விசா நடிகர்கள் மம்மூட்டி, ஷாருக்கான், சஞ்சய்தத், மோகன்லால், துல்கர் சல்மான், பிரித்திவிராஜ், நடிகை ஊர்வசி ரவுதாலா, மீரா ஜாஸ்மின் உள்பட பலருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு நடிகை திரிஷா, ஜோதிகா, அமலாபால், ராய் லட்சுமி, பாடகி சித்ரா, மீனா, நடிகர் பார்த்திபன், உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி போன்றோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது புதிதாக நடிகை நக்மாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. மேலும் துபாயில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது நடிகை நக்மாவுக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Categories

Tech |