Categories
சினிமா

புது படத்திற்காக நடிகர் கார்த்திக் எடுக்கும் பயிற்சி…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!!

குக்கூ திரைப்படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகமானவர் ராஜுமுருகன். இதனையடுத்து இவர் ஜோக்கர், ஜிப்ஸி ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனான கார்த்தி நடித்துள்ள பொன்னியின் செல்வன், சர்தார் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராக இருக்கிறது. அதன்பின் ராஜு முருகன் இயக்கத்தில் ஒரு புது படத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார்.

இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில் பெயரிடப்படாத இத்திரைப்படத்தில் இதுவரையிலும் ஏற்காத புது கதாபாத்திரத்தில் கார்த்தி நடிப்பதாகவும், இதற்கான ஒத்திகை மற்றும் பயிற்சியில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். கதைகளை வித்யாசமாக தேர்வு செய்து நடிக்கும் கார்த்தி படத்திற்காக எடுக்கும் இம்முயற்சி படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Categories

Tech |