Categories
உலக செய்திகள்

உக்ரைன் சுதந்திர தினம்: ரஷ்யா ஏவுகணை தாக்குதல்… 22 பேர் பரிதாப பலி…. சோகம்….!!!!!!

உக்ரைன் மீதான ரஷ்ய போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கிடையில் நேற்றைய தினம் உக்ரைன் தன் 33-வது சுதந்திரதினத்தை கொண்டாடியது. சோவியத் யூனியனில் இருந்து கடந்த 1991ம் வருடம் உக்ரைன் சுதந்திரம் பெற்றதை நேற்று கொண்டாடியது. இதனை முன்னிட்டு ரஷ்யா தன் தாக்குதல்களை தீவிரப்படுத்தும் எனவும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று உக்ரைனின் மத்திய டினிப்ரோ பெட்ரோவ்ஸ்க் பகுதியிலுள்ள சாப்லினோ நிலையத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 22 பேர் இறந்தனர். அத்துடன் 50-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் காணொலி மூலம் ஆற்றிய உரையின்போது உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இதை அறிவித்தார். இதில் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியிருப்பதாவது “டொனெட்ஸ்கிலிருந்து மேற்கே 145 கிலோ மீட்டர் தொலைவில் சாப்ளின் ரெயில் நிலையத்தை ரஷ்ய ராக்கெட்டுகள் தாக்கியது.

அவற்றில் 5 பயணிகள் ரயில் பெட்டிகள் தீக்கிரையாகியது. தற்போது அங்கு மீட்புப் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். எனினும் துரதிர்ஷ்டவசமாக இறப்பு எண்ணிக்கையானது அதிகரிக்கக்கூடும். ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 22 பேர் இறந்தனர் மற்றும் 50க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அதுமட்டுமின்றி சினெல்னிகோவ் மாவட்டத்திலுள்ள டினிப்ரோ பெட்ரோவ்ஸ்க் பகுதியில் பிற்பகல் 3 மணியளவில், ரஷ்ய ராக்கெட் ஒரு வீட்டில் மோதியது. அந்த ராக்கெட் தாக்குதலில் 11 வயது குழந்தை உட்பட சிலர் இறந்தனர். உக்ரைன் இறுதிவரை போராடும் என அவர் தெரிவித்தார்.

Categories

Tech |