தமிழக மின்வாரியம் சார்பில் ட்விட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதில் மின்வினியோகம் நிறுத்தப்படும் இடங்கள், மின்னணு மின் கட்டண விழிப்புணர்வு விவரங்கள் பதிவிடப்படுகின்றன. அத்துடன் புகார்களையும் பொதுமக்கள் அளிக்கலாம். மேலும் மின்வாரியத்தின் செயல் திறனை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகளை பொதுமக்களிடமிருந்து கேட்டு பெற்ற அதை செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
மேலும் மின்தடை, மின்சார விபத்து,மின்மாற்றிகள், பில்லர் பாக்ஸ் உள்ளிட்ட மின்சாதனங்களில் ஏற்படும் பழுதுகள் உள்ளிட்ட புகார்களை தெரிவிப்பதற்கு வசதியாக சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ‘மின்னகம்’ என்ற நுகர்வோர் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தை 94987 94987 என்ற செல்பேசி எண் மூலம் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.