நடைமுறை சிக்கல்களால் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களில் இருந்து பின்வாங்குவதில் தவறில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் விவகாரம், கல்வி தொலைக்காட்சி சிஇஓ நியமனம் உள்ளிட்ட விவகாரங்களில் பள்ளி கல்வித்துறை பின்வாங்கியதாக வைக்கப்பட்ட புகார்களுக்கு பதில் அளித்த அமைச்சர், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த திட்டங்களில் இருந்து பின்வாங்குவது தவறில்லை என்று தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று நாம் நினைக்கின்றோம். அதற்காக சில நேரங்களில் பின்வாங்குவது என்பது தவறில்லை. மக்களுக்காக சமூக சேவையாக செய்யும் துறைதான் பள்ளி கல்வி துறை. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே பின்வாங்குவது என்பது நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.