Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரு ஆளை காட்டுங்க…! ஈபிஎஸ் ஜெயிலுக்கு போகட்டும்… ஸ்டாலினை கேட்டுக்கொண்டADMK.. பெரும் பரபரப்பு …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தியிடம், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து  எடப்பாடி தரப்பு மேல்முறையீடு செய்கிறது என்ற கேள்விக்கான கருத்தை கேட்ன்னர். அப்போது பதிலளித்த அவர், இது ரிமண்ட் பண்ண கேஸ், சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று, நாங்கள் பொதுக்குழுவை கூட்ட சொல்லவில்லை, ஆகவே அதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.

தவறுதலாக புரிந்து கொண்டுள்ளீர்கள், மீண்டும் விசாரிங்கள் என்று ரிமண்ட் செய்து, மீண்டும் விசாரிக்கப்பட்ட வழக்கு. எந்த அளவிற்கு அதை எடுத்துக் கொள்வார்கள் என்பதை நீதிமன்றம் தான் சொல்ல வேண்டும். மொத்தமாக ஓபிஎஸ் அண்ணன், ஒற்றுமையுடன் இருக்க அனைவரையும் அழைத்தார், நீங்கள் சொன்னது போல அதை சரிவதிகாரப் போக்கில், எடப்பாடி பழனிச்சாமி நிராகரித்தார். இதை தொண்டர்களும், நாட்டு மக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்,

நான் என்ன சொல்கிறேன் என்றால்…  தொண்டன் முதல்வர் ஆவார், தொண்டன் தலைவர் ஆவார். அப்போ பழனிச்சாமி நீங்கள் விட்டு விடுங்கள், வெளியே வந்து ஒரே ஒரு நபரை நியமனம் செய்யுங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆகவே பதவி வெறியின் உடைய மறு உருவம் தான், அம்மா வகுத்த பொதுச்செயலாளர் பதவி வகிக்க துடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி.

உங்களது பணம்,  நீங்கள் அடித்த கொள்ளையும் உதவாது, சிறையில் இருந்து கட்சியை நீங்கள் நடத்த முடியாது. இதைத்தான் அரசிடமும், முதல்வரிடமும் கேட்டுக்கொள்கிறோம். கொட நாட்டிலிருந்து எல்லாவற்றையும் துரிதமாக செயல்படுத்துங்கள், ஜெயிலுக்கு செல்கிறவர்கள் ஜெயிலுக்கு போகட்டும், வெளியில் இருப்பவர்கள் வெளியே இருக்கட்டும். அண்ணன் ஓபிஎஸ் தலைமையில் அனைவரும் ஒருங்கிணை வேண்டும் என்பதுதான் எங்கள் நிர்வாகிகளின் கருத்து என புகழேந்தி தெரிவித்தார்.

Categories

Tech |