Categories
சினிமா

“இவர் என்னிடம் மாட்டிக்கிட்டார்”…. ஜாலியாக பேசிய இயக்குனர் வெங்கட்பிரபு….. !!!!

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரடக்சன்ஸ் தயாரித்துள்ள படம் “நட்சத்திரம் நகர்கிறது” ஆகும். காதலை மாறுபட்ட கோணத்தில் அதன் அரசியலை பேசும் இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன், டான்ஸிங் ரோஸ் கபீர் உட்பட பலர்  முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். இந்த படம் வரும் 31ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இவற்றில் திரைபிரபலங்கள் மற்றும் படக் குழுவினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அப்போது இயக்குனர் வெங்கட்பிரபு பேசியதாவது “2007 காலக்கட்டத்தில் இருந்தே ரஞ்சித்தை எனக்குதெரியும். ஒரு டாக்கு மெண்ட்ரிக்கு ஸ்டோரிபோர்ட் செய்யத்தான் வந்தார். இதற்கிடையில் நான் படம் செய்தபோது நானே அவரை அழைத்தேன். அவர் லிங்குசாமியிடம் தான் சேர்த்துவிட சொன்னார். ஆனால் பாவம் என்னிடம் மாட்டிக்கொண்டார். ரஞ்சித் திரைப்படங்களை பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது. அவருக்குள் இவ்வளவு சிந்தனைகள், இத்தனை விசயங்கள், குருவை மிஞ்சிய சிஷ்யனாக மாறி விட்டார். அவரது ஒவ்வொரு திரைப்படமும் ஆச்சர்யம் தரும். இப்பட டிரெய்லரே மிரட்டி விட்டது. ஹாலிவுட் திரைப்படம் போல் இருக்கிறது. படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

Categories

Tech |