Categories
அரசியல் தேசிய செய்திகள்

2024 தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேச்சு..!!

பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்த பீகார் மாநிலத்தில், அந்த கூட்டணியில் இருந்து விலகிய முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்  உள்ளிட்ட கட்சிகளோடு இணைந்து புதிய கூட்டணி ஆட்சி அமைத்தார். இதில் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட நிதிஷ், துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் பீகார் மாநில சட்டசபையில் இன்று  நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில் எதிர்பார்த்தபடி முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது பெரும்பான்மையை எளிதாக நிரூபித்திருக்கிறார். அப்போது பேரவையில் பேசிய நிதிஷ், பீகாரின் வளர்ச்சிக்காக நாங்கள் (ஆர்ஜேடி மற்றும் ஜேடியு) இணைந்து செயல்பட உறுதிமொழி எடுத்துள்ளோம்.

நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் என்னை அழைத்து இந்த முடிவுக்கு வாழ்த்து தெரிவித்தனர், 2024 தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன் என தெரிவித்தார்.

Categories

Tech |